03 AAGAMANGAL PUGAL VEDHA ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ

ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ

Lyrics

1.ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ வாகு தங்கு குருநாதா, நமோ நமோ! ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, – அருரூபா, 2.மாகமண்டல விலாசா, நமோ நமோ! மேகபந்தியி னுலாசா, நமோ நமோ! வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, – மனுவேலா, 3.நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ! காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ! நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, – நரதேவா, 4.ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ! யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ! ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, – இறையோனே! 5.அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ! மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ! அதிசய பராபர சீலா, நமோ நமோ, – அருளாளா, 6.பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ! குறையணுவிலாத குமாரா, நமோ நமோ! புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, – புதுவேதா, 7.நிறைவழியின் மேவிய கோனே, நமோ நமோ! முறைகள் தவறாத விணோனே, நமோ நமோ! நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, – நெறிநீதா, 8.இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ! பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ! எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, – இறையோனே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7075
Song ID
03-aagamangal-pugal-vedha-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0