Aa Neethiyulla Kartharae பாமாலை: 231 ஆ நீதியுள்ள கர்த்தரே நாவும்

பாமாலை: 231 ஆ நீதியுள்ள கர்த்தரே நாவும்

Lyrics

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும். 2.ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3.தயாபரா, நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4.மூச்சற்ற விக்ரகங்களால் ஆகாதே; தேவரீரே பாரத்தை உமது கையால் விரித்தீர்; அதில் நீரே அளவில்லாமல் ஆள்பவர்; நீரே பிதா, நீர் ரட்சகர்; உம்மாலே யாவும் ஆகும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2788
Song ID
aa-neethiyulla-kartharae-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open