Aa Yesuve Ummale Naan பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே

பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே

Lyrics

1. ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்; உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்; மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்; உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே என் ஆவிக் கேற்றதான அமிர்தம் தந்தீரே; உம் ஆசீர்வாதம் ஈந்து, என் பாவம் மன்னியும்; அன்போடு என்னைச் சேர்த்து, தயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும் அகற்றிப்போட வாரும், என் நெஞ்சில் தங்கிடும்; நான் உம்மைப் பற்றிக் கொள்ள கருணை புரியும்; மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாஷியும். 4. நல் மீட்பரே, உம்மோடு நான் ஐக்கியமாகவும், நாடோறும் வாஞ்சையோடு உம்மில் நிலைக்கவும், மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும்; தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5209
Song ID
aa-yesuve-ummale-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0