Aadhi Deivam Yesu Anbu ஆதி தெய்வம் இயேசு
ஆதி தெய்வம் இயேசு
Lyrics
ஆதி தெய்வம் இயேசு
அன்பு தெய்வம் இயேசு
அல்ஃபா ஒமேகா அவரே – 2
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு
அல்ஃபா ஒமேகா தானே இயேசு – 2
– ஆதி தெய்வம்
1. என்னை கருவினில் தெரிந்து கொண்டவர்
என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே – 2
சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர் – 2
என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர் – 2
– இயேசு இயேசு
2. வியாதிகளை போக்க வல்லவர்
தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர் – 2
பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர் – 2
நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர் – 2
3. மனித உருவில் வந்து உதித்தவர்
மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர் – 2
மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர் – 2
இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர் – 2
Details
- Numeric ID
- 234
- Song ID
- aadhi-deivam-yesu-anbu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1