Aahaa Enna Inbam Paralogam Song ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

Lyrics

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பைக்கூற நாவும் போதுமோ நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர் பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர் நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம் பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர் எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும் அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர் காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில் காத்து நீர் என்னைத் தேற்றி கருத்தாய் ஆதரித்தீர் பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன் ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே ஆழைப்பின் சத்தம் கேட்க நாட்கள் அதிகமாமோ நேசர் மார்பில் சாய்ந்திட வாஞ்சை பெருகிடுதே ஆகாய மேகந்தனில் சேர்த்திடும் நேரமிதில் ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1231
Song ID
aahaa-enna-inbam-paralogam
Views
11
Downloads
2
Source
Open