Aananthame Paramananthame Yesu ஆனந்தமே பரமானந்தமே இயேசு

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆனந்தமே பரமானந்தமே – இயேசு அண்ணலை அண்டினோர்க் கானந்தமே 1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு இங்கேயே பங்காய் கிடைத்திடினும் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே காரணமின்றி கலங்கேனே நான் விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட மேவியே சுக்கான் பிடித்திடுமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்? கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது! சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம் ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் 4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ? கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான் செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ 5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை தொண்டர் எமை அண்டி வந்திடுனும் சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை துன்பத்தினூடே அனுப்பிடுவார் 6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன் ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல் இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3492
Song ID
aananthame-paramananthame-yesu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
2
Source
Open