Aarathanai Nayaganey ஆராதனை நாயகனே

ஆராதனை நாயகனே

Lyrics

ஆராதனை நாயகனே உம்மை ஆராதிக்க வந்து நிற்கிறோம் ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதிக்க வந்து நிற்கிறோம் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் தேவைகள் எனக்கு முன்பாக மதிலாக நின்றாலும் என் தேவையே நீர் தானையா மனிதர்கள் எனக்கு எதிராக ஒருமனமாய் வந்தாலும் என் அடைக்கலம் நீர் தானையா உயிர் உள்ள நாளெல்லாம் உம்மை நம்பிடுவேன் என் ஆயுள் முடியும் வரை அண்டிக்கொள்வேன் நம்பின மனிதர் எல்லாரும் என்னை மறந்து போனாலும் என் நம்பிக்கை நீர் தானையா பெலவீன நேரத்தில் பெலன் இழந்து போனாலும் என் மருத்துவர் நீர் தானையா உம் கரத்தை பிடித்து நான் தினமும் நடந்திடுவேன் நீர் சொன்னால் போதும் கடல் மீதும் நடந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7979
Song ID
aarathanai-nayaganey-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open