Aarivar Aaraaro ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே

Lyrics

ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் 1. பாருருவாகுமுன்னே இருந்த பரப்பொருள் தானிவரோ? சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ 2. மேசியா இவர்தானோ? நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது தேவனின் கண்மணியோ? மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ஒளியோ? 4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ? 5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம் தீர்த்திடும் பானமோதான்? ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்தானோ?

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5272
Song ID
aarivar-aaraaro-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1