Aaruthal Adai Maname ஆறுதல் அடை மனமே கிறிஸ்துவுக்குள்

கிறிஸ்துவுக்குள்

Lyrics

ஆறுதல் அடை மனமே -கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை மனமே பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே உம்பர் கோன் மேகத்தின் மேலே – தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து ஜீவ நதிகள் ஓடுமே – எருசலேமில் திரளாய் ஜனங்கள் கூடுமே தேவ துதியைப் பாடுமே – யேசுகிறிஸ்தின் ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக ஏக்கம் பெருமூச்சும் உண்டாம் கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக் கலங்கி அழுவதும் உண்டாம் அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார் நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு யேசுவைப் பற்றின பேர்கள் – மரித்தும் உயிர்த் தெழுந்து புறப்படுவார்கள் மாசற்ற தேவன் அவர்கள் – உடனிருக்க மகிமை பெற்றிருப்பார்கள் பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில் நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7059
Song ID
aaruthal-adai-maname-song-lyrics-chords-ppt
Views
0
Downloads
0