Lyrics
ஆசையாகினேன் கோவே உனக்
கனந்த ஸ்தோத்திரம் தேவே
இயேசு கிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா
வேதா ஞானப் பர்த்தா என் தாதா நீயே கர்த்தா
மா தாரகம் நீ என்றே பரமானந்தா சச்சிதானந்தா
கானான் நாட்டுக் கரசே உயர் வான் நாட்டார் தொழும் சிரசே
நானாட்ட முடன் தேடித் தேடி நாடிப் பதம் பாடி
வீணாய் காலம் கழித்தேன் சற்றும் தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே எனைத் திருத்தே
வந்தனம் வந்தனம் யோவா நீ சந்ததம் சந்ததம் கா வா
விந்தையாய் உனைப் பணிந்தேன் சத்ய வேதா யேசு நாதா
Details
- Numeric ID
- 5276
- Song ID
- aasaiyaakinen-kovae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1