Aasthikalelleam Eedagumo ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
Lyrics
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமோ
என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ - 2
1. அன்பின் அக்கினி பற்றி எரியுதே
உள்ளமெல்லாமே உம்மை நாடித் தேடுதே - 2
தண்ணீர்கள் தணிப்பதில்லையே
நேசரே உந்தன் அன்பினை - 2
2. திராட்ச ரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ இனிமையானது - 2
ருசித்து விட்டேன் உந்தனன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை - 2
3. தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே - 2
ஆத்ம நேசர் எந்தன் நேசரே
ஆயுள் எல்லாம் போதும் நீரே - 2
Details
- Numeric ID
- 7062
- Song ID
- aasthikalelleam-eedagumo-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 1
- Downloads
- 1