Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Lyrics

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ! 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய மென்பாரே முடிவில்லா மகிமை செய்தாரே – பல முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5275
Song ID
aathuma-kartharai-thuthikkirathe-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1