Aayiram Rahangal ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்

ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன் ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன் ஆராதனை செய்து உளமாய் தொழுவேன் ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன் 1.ஆறுதல் இல்லாமலே அணைப்பார் இல்லாமலே - அனாதையாய் நடந்தேன் ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு இல்லாமலே - பசியாய் கிடந்தேன் ஆண்டவர் அழைத்தென்னை அன்பாய் போஷித்தார் ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார் 2.ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார் இல்லாமலே - நோயினால் வாடினேன் ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை முடிந்ததால்-வேதனையாய் ஓடினேன் ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார் ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார் 3. ஆனந்தம் இழந்ததால் நிம்மதி போனதால் துக்கத்தால் வாழ்ந்தேன் ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால் கவலையாய் வீழ்ந்தேன் ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார் ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5726
Song ID
aayiram-rahangal-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open