Aayiram Thudhi Paadal ஆயிரம் துதிப்பாடல்

ஆயிரம் துதிப்பாடல்
Unknown
Lyrics

Lyrics

ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும் ஆனந்தம் ஆனந்தம் என் மனதில் ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட 1. வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட தேன் பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட (2) வான் பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள்பாட யான் உனது திருப்புகழை கவியால் தினம்பாட ஆண்டவா உனைப் பாட ... 2. பகலொளியும் பால் நிலவும் ஒளியால் உனைப்பாட அலைகடலும் அதன் சிறப்பும் கருணையை தினம்பாட மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட யான் உனது திருப்புகழை கவியால் நிதம் பாட ஆண்டவா உனைப் பாட

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3429
Song ID
aayiram-thudhi-paadal-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
6