Akkini Nerupai Irangi Varum

அக்கினி நெருப்பாய் இறங்கி

Lyrics

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் – 2 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே – 2 எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – 2 எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் – 2 – அக்கினி நெருப்பாய் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் – 2 இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – 2 எங்களின் குற்றங்களை எரித்து விடும் – 2 3. ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் – 2 யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – 2 எங்களை அனுப்பும் தேசத்திற்கு – 2 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே – 2 அன்னிய மொழியை பேச வைத்தீரே – 2 ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – 2 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – 2 இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – 2 எங்களை நிரப்பும் ஆவியினால் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6922
Song ID
akkini-nerupai-irangi
Views
0
Downloads
0