Lyrics
நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்
நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே
மறுபடியும் உன்னை அழைக்கின்றார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
Aliyaah Aliyaah Aliyaah Aliyaah
அரணுக்கு திரும்புவோம்
Aliyaah Aliyaah Aliyaah Aliyaah
கர்த்தரை உயர்த்துவோம்
கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி வர
வாசலை இராப்பகல் திறந்து வைப்பார்
(உன்னை) ஒடுக்கினோரை குனிய செய்வார்
பரியாசம் செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார்
தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்
அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்
Details
- Numeric ID
- 6569
- Song ID
- aliyah-levi-4
- Views
- 1
- Downloads
- 1