Alleluya Jeyamae அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
Lyrics
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ
பாவம் பேயோடு மரணம்
பாழன் பேயினது அரணம்
சீவபரனால் திரணம்
திடமாயடைவோம் அவர் சரணம்
வலுசிங்கம் சிறையாச்சு
மாற்றானின் வல்லமை போச்சு
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு
திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர்
Details
- Numeric ID
- 7203
- Song ID
- alleluya-jeyamae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0