Lyrics
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே
யெகோவாயீரே -2
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
ஆத்துமாவை தினம் தேற்றிடும்
என் தேவனே
செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
Details
- Numeric ID
- 6851
- Song ID
- anaithaiyum-arulidum
- Views
- 0
- Downloads
- 0