ANANTHA GNANA SORUBA அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
Lyrics
அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!
கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்
காண வந்தாரே;-பரன் நரர் காண வந்தாரே.
கரு ணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!
அந்தப் பரமானந்த குணாலா, ஆதத்தின் தீதற்ற மனுவேலா!-எமை
ஆண்டு கொண்டாரே,-பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா!
ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே – நரர்க்
கன்பு கூர்ந்தாரே;-பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!
பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே;-எமைப்
பார்க்க வந்தாரே;-பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!
Details
- Numeric ID
- 7077
- Song ID
- anantha-gnana-soruba-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0