Lyrics
அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே என் ஆருயிரே
என் வாழ்க்கை உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம் ஜீவன் எனக்குள் வந்தததால்
இனி நானல்ல நீரே எனக்குள் பிழைப்பீரே
என் ஆசை பாசம் பற்று எல்லாம் நீரே நீரே
உம் கண்ணை என் மேல் வைத்து
கண்ணிமைப்போல் பாதுகாத்து
என் குரலை கேட்டால் உடனே
வந்து நோக்கிப் பார்ப்பீரே
உம் சமுகம் எந்தன் தஞ்சம்
உம் வார்த்தை எந்தன் அப்பம்
உம் குரலை கேட்கும் வரை
நான் காத்திருப்பேனே
உள்ளங்கைக்குள் என்னை வைத்து
சத்துரு கண்ணை குருடாக்கி - தோளின்
மேலே அமர வைத்து சுமந்து வந்தீரே
பேதை எனக்கு ஞானம் தந்து
உம் அறிவை போதிக்க வல்லமை ஈந்து
செம்மையான பாதையிலே
நடத்துகின்றீரே
சிக்கிமுக்கி தடுமாறி கலங்கிட்ட
வேளையிலே பயப்படாதே
என்றணைத்து நம்பிக்கை ஈந்தீரே
தலைகுனிந்து வெட்கப்பட்டு
அவமானம் சூழ்ந்த போதும்
உயர உயர உயர்த்துவேன்
என்று கரம் பிடித்தீரே
Details
- Numeric ID
- 4629
- Song ID
- anbe-en-anbe-en-aaruyire-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0