Anbin Devane Inba Rajavai அன்பின் தேவனே இன்ப ராஜனே
அன்பின் தேவனே இன்ப ராஜனே
Lyrics
அன்பின் தேவனே இன்ப ராஜனே
அன்பால் என்னைக் கவர்ந்திட்டீரே
சொந்தமாக்கவே உந்தன் இரத்தத்தால்
பாவம் கழுவி மீட்டிட்டீரே
நன்றியோடு நான் பாடுவேன்
நன்மைகளைச் சொல்லி புகழ்வேன்
நன்றியறியாத மனிதருக்கும்
துரோகிகளான மாந்தருக்கும்
நன்மைகளை செய்திடவே
நாதன் இயேசு பூவில் வந்தனரே
கிருபையின் வாசல் திறந்திடவே
மேன்மை யாவையும் துறந்தீர்
பாடுகளை ஏற்றுக்கொண்டு
பாரில் எந்தனையே வாழ வைத்தீர்
சாத்தானை மரணத்தால் வென்றிடவே
சிலுவை மரத்தினில் மரித்தீர்
வெற்றியுடன் உயிர்த்தெழுந்தீர்
வேந்தனாக இன்றும் ஜீவிக்கின்றீர்
Details
- Numeric ID
- 3336
- Song ID
- anbin-devane-inba-rajavai-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open