Anbu Paalaga Arumai Ratchaka அன்பு பாலகா அருமை இரட்சகா ஆரிராரிரோ

அன்பு பாலகா அருமை இரட்சகா ஆரிராரிரோ

Lyrics

அன்பு பாலகா அருமை இரட்சகா ஆரிராரிரோ தாவீதின் மைந்தனே தவக்குமாரனே தாலலேலேலோ 1. பாவியை மீட்க பூமிக்கு வந்த பாலனே கண்ணுறங்கு தாவியே வந்து ஏகமாய் பார்க்கும் நேசனே கண்ணுறங்கு மரியின் மைந்தனே மனுக்குமாரனே மன்னரும் அஞ்சவே மின்னலாய் வந்த மீட்பரே கண்ணுறங்கு 2. வான தூதரும் வாழ்த்திப் பாடிட வள்ளலே கண்ணுறங்கு ஞானவான்களும் பரிசளித்தனர் ஞானமே கண்ணுறங்கு மந்தை மேய்ப்பர்கள் மகிழ்ந்து பாடவே கந்தை பொதிந்து நிந்தை நீக்கியே நிமலனே உறங்கு 3. ஏழ்மை கோலத்தை ஏந்தி நின்ற ஏந்தலே கண்ணுறங்கு தாழ்மை பண்பை தரணிக்குத்தந்த தெய்வமே கண்ணுறங்கு விண்ணில் மகிமையே மண்ணில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் வைத்த மன்னனே கண்ணுறங்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5089
Song ID
anbu-paalaga-arumai-ratchaka-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open