Lyrics
அஞ்சாதே யேசு ரட்சகர்
ஆத்மத்துயர் நீக்க வல்லவர்
வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று
திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு
அருள் பெற்றான் என் வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல்
வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே
மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே
மானுவேலுனைத் தழுவலாலே
தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
இரட்சிப் புனக்குப் பலித்ததாலே
மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
தருணம் ஈதெனத் தாசர்கூடிச்
சாற்றும் மொழியை ஏற்று நீவர
Details
- Numeric ID
- 7165
- Song ID
- anjathae-yesu-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0