Anju Kallu Kaiyila அஞ்சு கல்…
அஞ்சு கல்லு கையில அற்புதந்தான்
Lyrics
அஞ்சு கல்லு கையில
அற்புதந்தான் பையில
அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க
ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2
அடிச்சான்யா தாவீது நெத்தியடி – அதில்
விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி – 2
ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2
முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2
1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது
கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2
கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2
ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே – 2
சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட
தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை – 2
2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ
சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் – 2
பட்சியின் பட்சணமும் கிடைக்குமே – 2
பலவானின் மதுரமும் கிடைக்குமே – 2
ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு
எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு – 2
3. சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன்
சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2
சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2
ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் – 2
மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே – 2
Details
- Numeric ID
- 200
- Song ID
- anju-kallu-kaiyila-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1