Antradamn Kaapattrineer அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
Unknown
Lyrics
Lyrics
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்
பேர் சொல்லி அழைத்து
பிள்ளை என்றணைத்து
பின்பற்றச் செய்தீரைய்யா
ஆவியில் நிறைத்து
அல்லல்கள் குறைத்து
ஆசீர்வதித்தீரைய்யா
எங்களை நீர் நினைப்பதற்கும் எங்களை விசாரிப்பதற்கும்
நாங்கள் எம்மாத்திரம் தேவா -2
மேன்மையானதே மகத்துவமானதே
வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2
விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து
பார்க்கையிலே
உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே
ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
உமக்கு முன்பு நான் மாயை மாயையே -2
நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே
தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
தவறும் மனிதரை தாங்கினீரைய்யா -2
பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5945
- Song ID
- antradamn-kaapattrineer-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0