Appa Ummai Nesikiren Aarvamudan அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்

Lyrics

அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே – ஐயா 2. பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேசர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய – என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா – ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6578
Song ID
appa-ummai
Views
0
Downloads
0