Appa Yesu Neenga vantha அப்பா …

அப்பா இயேசு நீங்க வந்தா

Lyrics

அப்பா இயேசு நீங்க வந்தா சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பா கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா தாவீதைப்போல் நடனமாடி உம்மை போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு பணிந்து தொழுதிட உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை – உம்மை நான் ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும் உம் பாதம் தொழுது மகிழுவேன் உயிரோடு இருக்கும் வரை உம்மை பாடுவேன் – உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன் நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும் உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6863
Song ID
appa-yesu-neenga-vantha
Views
0
Downloads
0