Arainthu mudiyatha athisayangalai …
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
Lyrics
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
என் வாழ்வில் செய்திடும் இயேசு ராஜனே
எண்ணி முடியாத அற்புதங்களை
எனக்காக செய்யும் தேவனே
ஆராதனை உமக்கு ஆராதனை
உமக்கு ஆராதனை செலுத்துவேன்
கூப்பிடும் சத்தம் கேட்டு பதில் தந்தீரே
உம் நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவேன்
தேடினவர்களை ஒருபொழுதும்
நிச்சயமாய் கைவிடமாட்டீர்
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தாவே நீர் என்னை சேர்த்துகொள்ளுவீர்
போதித்து என்னை என்றும் உம் வழியிலே
கர்த்தாவே சேர்த்துகொள்ளுவீர்
Details
- Numeric ID
- 5265
- Song ID
- arainthu-mudiyatha-athisayangalai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1