Arivar Araro Intha ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்

Lyrics

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே – ஆனடை குடிலிடை மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் 1.பாருருவாகு முன்னே இருந்த பரம்பொருள் தானிவரோ சீருடன் புவிவான் அவை பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ 2.மேசியா இவர் தானோ – நம்மை மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் ஆதி அன்புள்ள மனசானோ 3.தித்திக்கும் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண்ணொளியோ 4.பட்டத்து துரை மகனோ- நம்மை பண்புடன் ஆழ்பவனோ கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்பு காட்டிடும் தாயகனோ 5.ஜீவனின் அப்பமோ தான் – தாகம் தீர்த்திடும் பானமோ தான் ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவரிவர் தானோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6941
Song ID
arivar-araro-intha
Views
0
Downloads
0