Arputha Anbithe Porparan அற்புத அன்பிதே பொற்பரன்
அற்புத அன்பிதே பொற்பரன்
Lyrics
அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே
பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே
உம்மைப் போற்றி ஏற்றி புகழ்ந்திடவே
துதி சாற்றி ஊற்றி உள்ளம் மகிழுவேன் – 2
அன்பு பெருகும் சுனை நீரல்லவோ
அம்பு விதனில் அரசே
மாறா நின் தயவும் மா
நேசமதும் மறப்பேனா -2
1. நாலாம் ஜாமத்தில் நடுக்கடல் மீதே
நடந்து சீஷரைத் தேற்றிய ஏசுவே
எந்தன் நாவாய்ப் பொங்கும் அலைகடந்தே
கரை நாடி சேரத் துணை புரிவீர்
அன்பு
2. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே
நல்குவீர் தாழ்மையும் நின்சித்தம் செய்யவே
தாரும் தூய ஆவி அனுக்கிரகமே – இன்று
மீயுமென்னில் புது பெலனே
3. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே
எளியோன் எனக்கோர் பங்களித்தவரே
பரிசுத்தம் நான் பெறச் செய்யுமே
சுதந்திரம் நான் பெறச் செய்யுமே
4. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே
சிந்திக்க ஆனந்த கண்ணீர் பெருகுதே
அதை எண்ணி நிறைந்தன்பினால்
இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன்
Details
- Numeric ID
- 3203
- Song ID
- arputha-anbithe-porparan-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 2
- Source
- Open