Arul Maari Yengumaaga பாமாலை: 295 அருள் மாரி எங்குமாக

பாமாலை: 295 அருள் மாரி எங்குமாக

Lyrics

1. அருள் மாரி எங்குமாக பெய்ய, அடியேனையும் கர்த்தரே, நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும்; என்னையும், என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன்; திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன்; என்னையும், என்னையும் நீர் அணைத்துக் காருமேன். 3. இயேசுவே, நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும்; ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும்; என்னையும், என்னையும் சுத்தமாக்கியருளும். 4. தூய ஆவீ, கைவிடாமல் என்னை ஆட்கொண்டருளும்; பாதை காட்டிக் கேடில்லாமல் என்றும் காத்துத் தேற்றிடும்; என்னையும், என்னையும் என்றும் காத்துத் தேற்றிடும். 5. மாறா சுத்த தெய்வ அன்பும், மீட்பர் தூய ரத்தமும், தெய்வ ஆவி சக்திதானும் மாண்பாய்த் தோன்றச்செய்திடும்; என்னிலும், என்னிலும் மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5218
Song ID
arul-maari-yengumaaga-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0