Arumaiyura Nee Erangi அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,

Lyrics

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க, அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்; அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள் திவிய வரமாக வந்து-எனதாகும்; தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து சிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும் மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து வளமை வரவே விளைந்து-நிலையாக. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து, உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்! உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து, உதவு நதியாக வந்த-பெருமானே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5278
Song ID
arumaiyura-nee-erangi-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1