Asaathiyangal Saathiyamae Dheva PP…

அசாத்தியங்கள் சாத்தியமே தேவா

Lyrics

அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உங்க வர்த்தையாலே அசையாத மலை கூட அசைந்திடுமே அமராத புயல் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னால் தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணை நின்று காப்பவரே என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே தானாக முன் வந்து உதவினீரே முன்னுரிமை நான் என்று காண்பித்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
722
Song ID
asaathiyangal-saathiyamae-song-lyrics-chords-ppt-john-jebaraj-songs
Views
19
Downloads
1