Athi Mangala Karanane அதி மங்…

அதி மங்கல காரணனே

Lyrics

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி மங்கின எங்களுக்கும் திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய் துங்கவனே 2. முடி மன்னர்கள் மேடையையும் மிகு உன்னத வீடதையும் – நீங்கி மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ வந்தனையோ தரையில் 3. தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6940
Song ID
athi-mangala-karanane
Views
0
Downloads
0