Athikaalaiyilumai அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

Lyrics

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே இதுகாறும் காத்த தந்தை நீரே இனிமேலும் காத்தருள் செய்வீரே பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா எனக்கான ஈசனே வான ராசனே இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப் பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே தீ நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே புகழான நாதனே வேத போதனே பூரணமாய் உனைப் போற்றுவேன் தினந் தினம் மெய்யே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
605
Song ID
athikaalaiyilumai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
11
Downloads
2
Source
Open