Athikalaiyil Dhinam Thedi அதிகாலையில் தினம்தேடியே உம்
அதிகாலையில் தினம்தேடியே உம்
PPT
Lyrics
Lyrics
அதிகாலையில் தினம்தேடியே உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் என்
அன்பரின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா என்
தேவா அல்லேலூயா
கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்
கதிரவன் வருமுன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே
கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே
Details
- Numeric ID
- 6914
- Song ID
- athikalaiyil-dhinam-thedi
- Views
- 0
- Downloads
- 0