Athisayam Avar Yesu அதிசயம் அதிசயம்

அதிசயம் அதிசயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அதிசயம் அதிசயம் இயேசுவே. பூரண அதிசயம் இயேசுவே. மாபெரும் அதிசயம் இயேசுவே. வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே. உலகில் உள்ள அதிசயம் மாறும், மாறா அதிசயம் இயேசுவே. உலகில் உள்ள அதிசயம் மாறும், மாறா அதிசயம் இயேசுவே. வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும். அலைகளும் கடல்களும், அவர் வார்த்தைக்கு அடங்கிடும். குற்றமில்லா காலத்தில் ஏதேன் தோட்டத்தில் உலாவிய அதிசயம் இயேசு மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதை காட்டிய அதிசயம் இயேசு மனசாட்சி காலத்தில் பாவம் பெருகையில் பேழையில் காத்த அதிசயம் இயேசு! கிருபை கதவுகளைத் திறந்து புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு! மனித ஆளுகையில் பெருமை கொண்டு அழிந்து போகையில் மீட்டவர் இயேசு! நோவாவின் காலத்தை நினைவுகூர்ந்து கிருபையின் வில்லாய் நின்றவர் இயேசு! யுக யுகமாய், தலைமுறையாய் தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு! காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும் காத்து நடந்திடும் அதிசயம் இயேசு! வாக்குத்தத்த காலத்தில் ஆபிரகாம் முன் தூதனானவராய் வந்தவர் இயேசு கடல் மண் போலவும் விண் மீன்கள் ஆகவும் இஸ்ரவேலை மாற்றின அற்புதர் இயேசு நியாயப்பிரமாணத்தின் காலத்தில் சீனாய் மலையில் பிரமாணங்களை தந்தவர் இயேசு தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை வெளிப்படுத்தும் சத்தியம் இயேசு வீழ்ந்த மனுக்குலத்தை மீண்டும் மீட்கவே மரணத்தை ஜெயமாக்கி எழுந்தார் (எழுந்தவர் )இயேசு கிருபையின் காலத்தில் சபையை நிறுவி பரிந்து பேசும் மீட்பர் (பேசிடும் ஆசார்யர்) இயேசு ஆயிர அரசாட்சி காலத்தில் நித்திய ராஜாவா ஆட்சி செய்பவர் இயேசு ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும் நிரந்தர அதிசயம் அவர் இயேசு!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8228
Song ID
athisayam-avar-yesu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open