Atho En Nesar அதோ என் நேசர்

அதோ என் நேசர்

Lyrics

அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில் தொங்கினார் சிலுவையில் எந்தன் பாவங்கள் போக்கிடவே 1. பாவமே அறியாதவர் பாவமே செய்யாதவர் பாதகன் போல் தொங்கினார் பாவி என்னை இரட்சித்தார் வழிந்தோடிய இரத்தங்களால் வாழ்வு எனக்கு தந்துவிட்டார் - 2 2. என் பாவ சாபங்களால் நொறுக்கப்பட்டார் இயேசு நான் செய்த துரோகங்களால் உடைக்கப்பட்டார் இயேசு சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டார் காயங்களால் கதறி நின்றார் - 2 3. முள்முடி ஏற்றுக் கொண்டார் கோலினால் அடிக்கப்பட்டார் கொடூர ஆணிகளால் கோரமாய் துளைக்கப்பட்டார் உமிழப்பட்டார் அவர் முகத்தில் சிதைக்கப்பட்டார் அவர் உடலில் - 2 4. மரித்தார் உயிர்த்தெழுந்தார் நம்பிக்கை நமக்குத் தந்தார் வருத்தங்களால் தவிப்போர் வாருங்கள் இயேசுவிடம் இயேசுவை அன்றி மீட்பு இல்லை இயேசுவை அன்றி வாழ்வே இல்லை - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7930
Song ID
atho-en-nesar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open