Aaviyai Melaipolae Ootrum ஆவியை மழைபோலே யூற்றும் பல

ஆவியை மழைபோலே யூற்றும் பல

Lyrics

ஆவியை மழைபோலே யூற்றும் -பல ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும் பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே, பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும் 1.அன்பினால் ஜீவனை விட்டீர்,-ஆவி அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்; இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ ஏராளமான ஜனங்களைச் சேரும். 2.சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து, பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு பாக்கியரென்னும் நல் வாக்கையருளும் 3.காத்திருந்த பல பேரும்-மனங் கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்; தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். 4.தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும் சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப் பாத்திரராக அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். – ஆவியை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7092
Song ID
aviyai-malaipole-yurrum-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0