Azhagir Sirantha Koomaanai அழகிற் சிறந்த கோமானை

அழகிற் சிறந்த கோமானை

Lyrics

1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் 5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்; காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4807
Song ID
azhagir-sirantha-koomaanai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1