Bakkiyar Innar பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார்

Lyrics

பாக்கியர் இன்னார்-என்றிறைவன் பண்புடன் சொன்னார். ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில் ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர் பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில் போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும், காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர், நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர் காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார் பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின் பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத் தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர் நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத் துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர் சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5241
Song ID
bakkiyar-innar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1