Baktharudan Paaduven பக்தருடன் பாடுவேன் பரம சபை

பக்தருடன் பாடுவேன் பரம சபை

Lyrics

பக்தருடன் பாடுவேன் பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் 1.அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும் பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் 2.இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு அகமும் ஆண்டவன் அடியே சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும் இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே 3.தாயின் தயவுடையதாய்த் தமியன் நின் சேயன் கண் மூடுகையில் பாயொளிப் பசும் பொன்னே பக்தர் சிந்தாமணி தூயா திருப்பாதத் தரிசனம் தந்தருள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
658
Song ID
baktharudan-paaduven-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
10
Downloads
3
Source
Open