Balipeedamae பலிபீடமே

பலிபீடமே

Lyrics

பலிபீடமே பலிபீடமே கர்த்தரின் பலிபீடமே(2) எரியட்டுமே எரியட்டுமே பரிசுத்த அக்கினியே எங்கள் தேசம் மறுரூபம் ஆகனுமே எங்கள் சபைகள் உயிர் பெற்று எழும்பனுமே அந்த பாகாலின் பலிபீடம் அழியனுமே எங்கள் தேசத்தின் தீட்டெல்லாம் எரியனுமே கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் எங்கும் முழங்கனுமே உயிர் பெற்று எழும்பனுமே(2) அல்லேலூயா அல்லேலூயா (4) 1.பின்மாறி மழைக்காக வேண்டிடுவோம் ஆசீர்வாத மழை பொழிந்திடுவார் இரட்சிப்பின் சந்தோஷத்தால் மகிழ்வோம் பாக்கியமாம் சுவிசேஷத்தை சொல்லுவோம் நான்கு திசை எங்கும் பறைசாற்றுவோம் இயேசுவே மெய்யான தெய்வம் என்று (2) 2.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் பூரண இரட்சிப்பை நிறைவேற்றுவோம் காலம் கொடியதாய் வருகின்றதே இயேசுவை அண்டி நாம் நடந்திடுவோம் கோடான கோடி மக்கள் இங்கே நரகத்தின் பாதையில் செல்கின்றாரே அவர்களின் மீட்புக்காய் போராடுவோம் இயேசுவே வழி என்று சொல்லிடுவோம் 3.பூரண கிருபையை பெற்றிடுவோம் குறைவின்றி கிருபையால் வாழ்ந்திடுவோம் ஆவியின் வரங்களை பெற்றிடுவோம் கிறிஸ்துவின் சபையை நாம் அலங்கரிப்போம் மகிமையின் மேல் மகிமை அடைந்திடுவோம் மறுரூபம் ஆகி நாம் சென்றிடுவோம் ராஜாதி ராஜாவாம் இயேசுவையே மகிமையிலே நாம் தரிசிப்போமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7974
Song ID
balipeedamae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open