Bayapadathe Unodu Irupaar பயப்படாதே உன்னோடு இருப்பார்

பயப்படாதே உன்னோடு இருப்பார்
Unknown
PPT
Lyrics

Lyrics

பயப்படாதே உன்னோடு இருப்பார் கலங்காதே அவர் கைவிடமாட்டார் திகையாதே அவர் என்றென்றும் நம் தேவன் - அல்லேலூயா -2 யாவே சபயோத் சர்வ வல்லவரே நம்மை காத்திடும் கேடகமே சிங்கம் போல் சத்துரு எதிர் வந்தாலும் ஒருபோதும் நாம் வீழ்வதில்லை 1. எகிப்தின் சுமைகள் நீக்கி நம்மை ஓங்கிய கையால் விடுவிப்பவர் அடிமைத்தனத்தில் இருந்த நம்மை மீட்டெடுத்து வழி நடத்துபவர் பார்வோனின் சேனை தொடர்ந்திட்டாலும் அக்கினி மதிலாய் சூழ்ந்திடுவார் செங்கடல் நம்மை தடுத்திட்டாலும் பிளந்து முன் செல்லுவோம் 2. பாலைவனமாய் இருக்கின்ற வாழ்வை சோலைவனமாய் மாற்றுபவர் ஆறுதல் தேடி அலைகின்ற வேளை அன்பின் கரங்களால் அணைத்திடுவார் சிறகு ஒடிந்த பட்சியைப் போல பெலன் இல்லாமல் இருந்தாலும் பரத்தின் ஆவி நம்மேல் இறங்க கழுகைப் போல் எழுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7147
Song ID
bayapadathe-unodu-irupaar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open