Lyrics
பயப்படாதே நான் உன் தேவன் திகையாதே நீ என் தாசன்-2
உன்னை நான் வெறுத்து எங்கேயும் மறைத்து அழிவில் விடவில்லை
சோதனை துன்பம் உன்னிலே ஊற்றி சோர்வாய் விடவில்லை
தீங்கு வரும் பயப்படாதே தீண்டுவார்கள் பயப்படாதே
அக்கினி சூளை சுட்டெரித்தாலும் சேதம் இன்றி காப்பேன் உன்னை-2
சேதம் இன்றி காப்பேன் உன்னை
பயப்படாதே நான் உன் தேவன் திகையாதே நீ என் தாசன்
சிங்கங்கள் அங்கே பசியாய் இருந்தாலும்
அந்த கெபியில் உன்னை போட்டாலும்-2
உன் வேண்டல் கேட்டு உன் அருகே நின்று
கரம்பிடித்து காப்பேன் உன்னை-2
தீங்கு வரும் பயப்படாதே தீண்டுவார்கள் பயப்படாதே
சிங்கம் நடுவில் நின்றாலும் சேதம் இன்றி காப்பேன் உன்னை-2
சேதம் இன்றி காப்பேன் உன்னை
பயப்படாதே நான் உன் தேவன் திகையாதே நீ என் தாசன்
வனாந்திரத்தில் நீ தனியாய் சென்றாலும் தண்ணீருமின்றி நீ தவித்து நின்றாலும்-2
கண்மலையை பிளந்து தண்ணீரை ஊற்றி தாய் போல காப்பேன் உன்னை
தந்தை தன் பாலகனை சுமப்பதுபோல என் தோளில் சுமப்பேன் உன்னை
தீங்கு வரும் பயப்படாதே தீண்டுவார்கள் பயப்படாதே
அக்கினி சூளை சுட்டெரித்தாலும் சேதம் இன்றி காப்பேன் உன்னை-2
சேதம் இன்றி காப்பேன் உன்னை
பயப்படாதே நான் உன் தேவன் திகையாதே நீ என் தாசன்-2
Details
- Numeric ID
- 1466
- Song ID
- bayappadathe-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0