Boomiyin Kudigale Neer பூமிய…

பூமியின் குடிகளே நீர்

Lyrics

பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு சாமியினன்னாமமதிலே மகிழுவீர் ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை உருக்கமாய்த் – தங்கருணைப் பெருக்கமாய் – மீட்டரணாந் துருக்கமாய் – இதுவரைக்கும் நெருக்கமாய் – ஊக்கமாய் நின்றார் தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத் தந்துமா நிர்ப்பந்தமற விந்தையாகவே இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச் சிந்தையில் நினைந்து முழு நன்றியாகவே சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ தாசரே – யேசுநாதர் நேசரே – எருசலேம் வாசரே – கர்த்தருக்குள்ளாம் ராசரே – ஆசாரிமாரே கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற சத்தியத்தை எத்தினமும் உற்றுணருவீர் அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்மெனச் சொற்றவரே விக்கரகப் பத்தியகல்வீர் இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண் ணோக்கினார் – எங்களபவம் போக்கினார் – சகலதுன்பம் நீக்கினார் – தமதுமந்தை ஆக்கினார் – தூக்கினாரென்று ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ டாவியுடனே நமது நாவுமிசைந்து தேவ பிரகாரங்களிலே வருவோமே புகழ்ச்சி மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து பாவலர் மற்றோரே நல்ல நாவலரே கர்த்தர் வீட்டுக் கோடுவோம் – அவர் நாமத்தில் கூடுவோம் – அவர் பதத்தை நாடுவோம் – அவர் மகிமை தேடுவோம் – பாடுவோம் துதி வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை உள்ள தூழி ஊழிகாலம் தொல்லையுண்டுமோ சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள் எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம் பிடிக்கிறோம் – சத்தியத்தைப் பிடிக்கிறோம் – பேயரங்கம் இடிக்கிறோம் – அவனையெங்கும் அடிக்கிறோம் – சீக்கிரம் ஜெயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5240
Song ID
boomiyin-kudigale-neer-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1