Deva Enaimarakkade Song

Lyrics

தேவா எனைமறக்காதே – இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே நேயா உனையன்றி நீசனுக்கார் கதி தூயா கிருபைகூர் நான் மகாதோஷி வானுலகோர்தொழும் நாதர் -இந்த மானிடர்கரையேற வந்தசகாயா காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா பாவியின் மேலிரங்கையா – பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத் தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா என்மீறுதல் நினையாதே எந்தன் இளமையின் பாவத்தை மனதில்வையாதே உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன் நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன் நெருக்கப்படுகிறேன் தேவா – என்னை உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா சரணம் சரணம் சருவேசா – இந்தத் தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும் மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6097
Song ID
deva-enaimarakkade
Views
0
Downloads
0