Deva Evveettil Intrae Meavi தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி

தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி
Unknown
Lyrics

Lyrics

தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா 2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.-என்றும் அத்தனோ டுற வாக,-ஜெப துந்துமிகள் முழங்க,-ஐக்யம் பந்தமுடன் இலங்க, தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச் சொந்தமுடன் ஈவாயே,-இவர் சந்ததம் வாழ நீயே. – தேவா 3. இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,-பரன் இஷ்டப்படி நடந்தே, அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,-இவர் அனுதினமும் மகிழ்ந்தே,-உயர் அம்பர வீட்டில் சேர்ந்து,-மிகு கெம்பீரமாக வாழ்ந்து, புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில் இங்கிதமாய்க் கொண்டாட,-நிதம் மங்களக் கவி பாட. – தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
840
Song ID
deva-evveettil-intrae-meavi-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0