Deva Gaanam Song தேவ கானம் விண்ணில் கேட்குதே – இன்று

தேவ கானம் விண்ணில் கேட்குதே – இன்று

Lyrics

தேவ கானம் விண்ணில் கேட்குதே – இன்று தேவ மைந்தன் பூவில் உதித்ததால் ஏழை கோலம் எடுத்தார் எளியோர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார் மாந்தர் நம்மை காக்க மகிபன் அன்பை மகிழ்ந்து போற்றுவோம் இறை மைந்தன் அன்பை வியந்து பாடுவோம் ஆடுவோம் பாடுவோம் அகம் மகிழ்ந்து புகழுவோம் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் என்றே தூதர் வாழ்த்து கூறினார் வானமும் பூமியும் ஒன்றாய் இணைந்தது அவர் வரவால் வல்லவர் நாமம் உயர்த்தி பாடுவோம் நம் மீட்பர் புகழை எங்கும் கூறுவோம் ஆடுவோம் பாடுவோம் அகம் மகிழ்ந்து புகழுவோம் வானில் மீண்டும் வருவார் இயேசு மகாராஜன் நீதி செய்யும் அரசராகவே விழித்திருந்து நாமும் ஜெபித்திடுவோம் இணைந்திடுவோம் அவர் வருகையில் வாக்குகள் தந்தவரை பற்றி வாழுவோம் நித்திய ஜீவனை பெற்று மகிழுவோம் ஆடுவோம் பாடுவோம் அகம் மகிழ்ந்து புகழுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6466
Song ID
deva-gaanam-song-lyrics-chords-ppt
Views
0
Downloads
0