Deva Ivveetil Indre Song

Lyrics

தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே – தயை செய்வாய் எமது கோவா மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள் முன்னவா சத்ய வேதா பூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா – யேசு புண்ணியனே மா நீதா -இங்கு நண்ணுவாய் மெய்ப் போதா – தயை பண்ணுவாய் வினோதா மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது ஜீவனே யேசு கோனே – ஏழைப் பாவிகள் மீட்பன் தானே விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக – அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக – என்றும் அத்தனோ டுற வாக – ஜெப துந்துமிகள் முழங்க – ஐக்யம் பந்தமுடன் இலங்க, தந்தைப் பரனே இன்று உன்றன் அருள் நிறைவாய்ச் சொந்தமுடன் ஈவாயே – இவர் சந்ததம் வாழ நீயே இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே -பரன் இஷ்டப்படி நடந்தே அங்கம் மனது யாவும் பங்கம் இன்றித் தொடர்ந்தே -இவர் அனுதினமும் மகிழ்ந்தே -உயர் அம்பர வீட்டில் சேர்ந்து -மிகு கெம்பீரமாக வாழ்ந்து புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில் இங்கிதமாய்க் கொண்டாட -நிதம் மங்களக் கவி பாட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6096
Song ID
deva-ivveetil-indre
Views
0
Downloads
0